இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் ( சிரிக்கட்டும் )
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1.
மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம் – இதயங்கள்
2.
அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே – இதயங்கள்
3.
தாய்மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் – இதயங்கள்
4.
தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் – இதயங்கள்
5.
உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிக்கூருவோம் – இதயங்கள்
6.
தமது ஜனத்திமேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார் – இதயங்கள்
7.
நல்லவர் ந்ல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் – இதயங்கள்
8.
சஞ்சலமும் த்விப்பும் பறந்து ஓடியதே _அது
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல் – இதயங்கள்